வேலுார் : வேலுார் மேட்டு இடையம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம், (24), ரவுடியான இவரை வழிப்பறி வழக்கில், வேலுார் வடக்கு காவல் துறையினர் , கடந்த மாதம் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர் மீது தலா 40, க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில், கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியனுக்கு, எஸ்.பி., திரு. ராஜேஸ் கண்ணன், பரிந்துரை செய்தார். அதன்படி இவரை குண்டர் சட்டத்தில், கைது செய்ய மாவட்ட குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். காவல் துறையினர், அதற்கான நகலை சிறையிலுள்ள அவரிடம் இன்று வழங்கினர்.