காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சதாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயா, (24), இவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண், (23), இவர் மீதும் கொலை முயற்சி கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. சுதாகர், மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர்த்திக்கு பரிந்துரைத்தார். ஆட்சியர் திருமதி. ஆர்த்தி, குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்