திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு அருகே வேட்டகிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வ/53, க/பெ சம்பத் என்பவர் வேட்டகிரிபாளையம் மலையடிவாரம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கண்ணமங்கலம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.G.சாலமோன்ராஜா அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேற்கண்ட நபர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்