திண்டுக்கல் : கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அதிரடி நடவடிக்கை. 18.03.2022 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 28.11.2021 ம்தேதி சுப்புலட்சுமி (58) என்ற மருத்துவப் பணியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழஅச்சணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (23) என்பவரை வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குற்றவாளி ஜெகதீஸ்வரனின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் ஜெகதீஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா