சென்னை: சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி, நில அபகரிப்பு, வங்கி மோசடி உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 2 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.
நடப்பாண்டில் இதுவரை 34 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. 2 History sheeted accused have been arrested in connection with murder, attempted murder, land grabbing and bank fraud cases in Chennai.So far 34 criminals were detained under the GOONDAS Act.சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 11.03.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 21 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 1 குற்றவாளி, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 2 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 34 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 1) விஜய் (வ/25) கண்ணகி நகர் என்பவர் மீது 1 கொலை முயற்சி வழக்கும், 2) சந்தோஷ் (எ) மண்டை சந்தோஷ் (வ/25) மைலாப்பூர் என்பவர் மீது 2 கொலை முயற்சி வழக்கும் உள்ளது. மேலும் மேற்படி இருவரும் மயிலாப்பூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் ஆவர். மேற்படி இருவரும் சேர்ந்து கடந்த 15.01.2022 அன்று கணேஷ் என்பவரை தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, குற்றவாளிகள் விஜய், சந்தோஷ் (எ) மண்டை சந்தோஷ் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 08.03.2022 அன்று உத்தரவிட்டார்.
அதன்பேரில், மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 05.03.2022 முதல் 11.03.2022 வரை கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட 2 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.