திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செங்குணம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்த தருமன், வ/58, த/பெ ஊமை நாயக்கர் என்பவர் தனது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, போளூர் காவல் ஆய்வாளர் திரு.K.ஜெயபிரகாஷ் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும், செய்யாறு நகரம், கண்ணியம் நகரைச் சேர்ந்த தெய்வசிகாமணி வ/46 த/பெ இன்பம் என்பவர் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெய்சங்கர் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக செய்யாறு காவல் ஆய்வாளர் திரு.S.பாலு அவர்கள் செய்யாறு.
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்மார்.இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்