விருதுநகர் : விருதுநகரில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கில் போலீஸ் காவல் விசாரணை முடிந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜுனத்அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை.
எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி. பரிந்துரையின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு மதுரை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.