தர்மபுரி : தர்மபுரியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை சிலர் விற்பதாக காவல் துறையி னருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுன்காவல் துறையினர் , கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது கிருஷ்ணமூர்த்தி (57), ஜெயமூர்த்தி (57), ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (40), ஆகிய 3 பேர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் , அவர்களிடம் இருந்து 500 குட்கா பொட்டலங்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.