திண்டுக்கல்: திண்டுக்கல் தோட்டனுத்தில் இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டித்தரும் பணி துவங்கியது.தமிழகத்திற்கு அந்த 1984ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வந்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது .பாதி விலையில் அரிசி மற்றும் பருப்புகள்,அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படுக்கபாய், இருக்க வீடு, மின்சாரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் பல வீடுகள் சிதிலமடைந்து குடியிருப்பதற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அரசு அகதிகள் முகாமில் புதிய வீடுகள் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து கோபால்பட்டி வத்தலகுண்டு உட்பட பல இடங்களில் அகதிகள் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.75 லட்சத்தில் மொத்தம்ரூ.17.17 கோடியில் வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.உள்கட்டமைப்பு வசதிகளுக்கென தனியாக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை வரும் ஏப்.14 க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.