மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தூம்பக்குளம் கிராமத்தில், உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மலையாள பகவதி பத்ரகாளியம்மன், திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக, நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில், மதுரை ஆதினம் மற்றும் முன்னாள் அமைச்சரும்., சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.
உதயகுமார் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பூஜிக்கப்பட்ட தீர்த்தம் பக்தர்கள் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளான, மதுரை, திருமங்கலம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, கள்ளிக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர்கள் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த, வெள்ளியம்மாள் (40), என்பவரிடமிருந்து 1,30,000 மதிப்புள்ள 4 சவரன் நகை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராசாத்தி (60), என்பவரிடம் இருந்து 1,00,000 மதிப்புள்ள 3 சவரன் தாலி கொடியை, திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மற்றும் நகையை பறிகொடுத்த பெண்கள், கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த கூடக்கோவில் காவல் துறையினர் ,கோவில் கும்பாபிஷேகத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை, வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி