மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த குராயூர் கிராமத்தில் , கடந்த 30 நாட்களாக குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர் . இதுகுறித்து, அதிமுக பஞ்சாயத்து தலைவரிடமும் , மாவட்ட அதிகாரியிடம், முறையிட்டும் எந்த பலனும் கிடைக்காததால் , குராயூர் கிழக்குத் தெரு பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் குராயூர் – காரியாபட்டி சாலையில், அமர்ந்து, குடிநீர் கேட்டு போராட்டத்தில், ஈடுபட்டனர். மாசவ நத்தம் , குராயூர் , ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீரின்றி அந்த பகுதி வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமங்களுக்கு வரக்கூடிய குடிநீர் பைபுகள் சேதம் ஆகியுள்ளதால் , அதனை சீர் செய்ய அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட நிர்வாகமும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர் . இது குறித்து ,மாவட்ட நிர்வாகத்தில், பலமுறை முறையிட்டும் ,செவி சாய்க்கவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி