கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவடிவேல், அவர்கள் நேற்று ( 23.04.2022), தோகைமலை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பமேட்டுபட்டியில், நடைபெற்ற கிராமங்களை நோக்கி காவல்துறை நிகழ்ச்சியில், நேரில் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் அச்சமின்றி புகார் தெரிவிக்குமாறும், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் அதன் அவசியத்தைப் பற்றியும் மேலும் சமூகத்தில் பின்தங்கிய , மாணவ மாணவிகளின் கல்வி அளவு அறிவு வளர்ப்பது, பற்றியும் கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார். சைபர் கிரைம் நம்பர் 1930 தொலைபேசி எண்ணை குறித்தும், பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பிரச்சனைகள், மற்றும் பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவது குறித்தும் அதன் மகத்துவத்தை பொதுமக்களுக்கு, அறிவுரைகளாக நல்ல முறையில் வழங்கப்பட்டது.