மதுரை: மதுரை சரக DIG மற்றும் மாவட்ட SP ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 26.03.2022 இன்று மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் நகரி கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில், பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்முகாமில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி IPS., மதுரை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் . திரு .வீ.பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்தும், பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், எந்தெந்த வகையில் தடுக்கலாம் என்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் எந்த வகையில் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்தும், பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதில் பெற்றோர்களின் பொறுப்பு குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும், பெண் குழந்தைகளுடைய கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது.
என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், சமீப காலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் சகசமாக மனம் விட்டு பேசாமல் இருப்பதனால் தங்கள் குழந்தைகளுக்கு என்ன நேர்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் போகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடத்து மனம் விட்டு பேசி தங்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் மனக் குழப்பங்களை நீக்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும், பாலியல் குற்றங்கள் நிகழும்போது அதனை தடுப்பது குறித்தும்.
மதுரை சரக DIG அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திரு. பாலசுந்தரம் காவல் துணை கண்காணிப்பாளர் சமயநல்லூர் உட்கோட்டம், ஸ்ரீதர் பாதுகாப்பு அலுவலர் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, மதுரை பிரேமலதா தலைமை ஒருங்கிணைப்பாளர் சமூக நலத்துறை மதுரை, சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மலர்விழி , உமாதேவி , மற்றும் பள்ளி தாளாளர் செந்தில், ஆசிரியர்கள் , மாணவிகள், காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி