நீலகிரி மாவட்டம் : பந்தலுார் சேரம்பாடி, திருவள்ளுவர் நகரில், கிணற்றில் பச்சிளம் குழந்தையை, வீசிய சம்பவத்தில், உரியவர்களை காவல் துறையினர், தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி, திருவள்ளுவர் நகர் கிராமத்தை ஒட்டிய, பகுதியில் பயன்படுத்தாத கிணறு உள்ளது.
நேற்று மாலை, இப்பகுதி சிறுவர்கள், கிணற்றில் பச்சிளம் குழந்தையின், சடலம் இருந்ததை கண்டனர். இதுகுறித்து, சேரம்பாடி காவல் துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா, தலைமை யிலான, காவல் துறையினர், மற்றும் மருத்துவ குழுவினர் மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, கொண்டு சென்று விசாரிக்கின்றனர்.