சென்னையில்: சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் புகார் சம்பந்தமாக போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளவேண்டும். என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் முதன் முறையாக ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் அடங்கிய 25 போலீஸ் நிலையங்களிலும் ‘காவலர் வரவேற்பு மேஜை’ என்ற நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வரவேற்பு போலீசாருக்கு அடிப்படை மென்திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரவேற்பு மேஜையில் உள்ள போலீசார் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, வழிகாட்டி அவர்களுக்கு உதவுவார்கள்.