சிவகங்கை : மாவட்டம் முழுவதிலும் பள்ளி/கல்லூரி, மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, இளம் தலைமுறையினரிடையே சாதி உணர்வை மேலோங்கச் செய்யும் வண்ணக் கயிறுகள், சாதி உணர்வை தூண்டும் வகையிலான ரப்பர் பேண்டுகள், சாதிய வாசகங்கள், மற்றும் படங்கள் அச்சிடப்பட்ட டீசர்ட்டுகள் ஆகியவற்றை தயாரித்தல், விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. த.செந்தில் குமார், அவர்கள் கூறுகையில், “பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்து அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இவற்றை விற்பனை செய்யும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, அவர்களின் கடைகளும் மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்