திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்கும் நோக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 19.03.2022-ந் தேதி Say No to Drugs என்ற தலைப்பில் திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் 5 கிலோ மீட்டருக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் கடந்த 22.03.2022-ந் தேதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து இன்று 24.03.2022-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகளை வழங்க கூடாது என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு மொத்த விற்பனையில் மருந்துகளை வழங்க கூடாது என்றும், அங்கீகரிக்கப்படாத மருந்துகள் மற்றும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. என்றும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார். திருவண்ணாமலை கிராமிய காவல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்கள் மற்றும் சுகாதார துறை ஆய்வாளர் திருமதி.கோகிலா அவர்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்