சிவகங்கை : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால், 444 நேரடி சார்பு ஆய்வாளர் பணிக்கான பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற (25.06.2022), ம்தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 மையங்களில் நடைபெற உள்ளது.இந்த எழுத்து தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4083 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு எழுத உள்ளனர். காலை 10 மணிக்கு பொது அறிவு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடையும். அதேபோல் மாலை 03.30 மணிக்கு தமிழ் திறனறிவு தேர்வு தொடங்கி 05.10 மணிக்கு நிறைவடையும்.
இத் தேர்வானது முழுவதும் காவல்துறையினரால், நடத்தப்படுவது. தேர்வு அறைகளிலும், தேர்வு மைய வாகனங்களின் வெளி புறங்களிலும், காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 575 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் தேர்வு முழுவதும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது.
தேர்வுக்கான அறிவுரைகள் : தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்பு கடிதத்தையும், கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படுவர், பென்சில் மற்றும் செல்போன், ஹெட்போன் ப்ளூடூத், கால்குலேட்டர் ,ஸ்மார்ட் வாட்ச் உட்பட எவ்வித மின்னணு சாதனங்களும் எடுத்து வரக்கூடாது.
தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் பொதுஅறிவு தேர்விற்கு 8:30, மணியிலிருந்து தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணிக்கு 03.30 மணிக்கு சரியாக துவங்கிவிடும் அதன்பிறகு யாரும் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள் .
தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காப்பியடிப்பது ஆள் மாறாட்டம் செய்வது தேர்வர்களின் சைகை காட்டுவது அனாவசியமாக பேசுவது வினாத் தாளில் எழுதி காண்பிப்பது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடக் கூடாது மீறினால் அவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவது கடுமையான சட்ட நடவடிக்கை உட்படுத்தப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில், புகைப்படம் விடுபட்டிருந்தாலோ அல்லது மாறி மாறி இருந்தால் அவருடைய சமீபத்திய புகைப்படத்தை தகவலை சரியாக எழுதி அரசிதழ் பதிவு அதிகாரி கையொப்பம் பெற்று வந்தால், போதுமானது கையெழுத்து பெற இயலாதவர்கள் தேர்வு மையத்தை அணுகி தீர்வு பெறலாம்.
மேலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை உதாரணமாக ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு மைய வளாங்களிலேயே விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்தி மதிய உணவு பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் நியமிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி அழகப்பா ரவுண்டானா மற்றும் ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அருகில், தேர்வு மைய வழிகாட்டும் வரை படங்களோடு காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. தா .செந்தில்குமார், அவர்கள் கூறுகையில் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் குறித்த நேரத்தில், தேர்வு மையங்கள் வருமாறும் எவ்வித முறைகேடுகளும் ஈடுபடாமல், நேர்மையான முறையில் தேர்வை எதிர்கொள்ளுமாறும் வழங்கப்பட்ட அறிவுரை தவறாமல் பின்பற்றும் அறிவுறுத்தியுள்ளார் .மேலும் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தேர்வு எழுதி வெற்றி பெற்று சிறந்த காவல்துறை அதிகாரிகளாக செயலாற்ற தனது வாழ்த்துச் செய்தியில், தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்