சென்னை: சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் பாரத ஸ்டேட் வங்கியினர் வழங்கிய 60 கணினி இயந்திரங்களை, 60 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களுக்கு வழங்கினார். Tmt. S.Rajeshwari IPS, Joint Commissioner of Police, (West) distributed 60 computers donated by State Bank of India to Police Boys & Girls Club. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் மேற்பார்வை அதிகாரி (Nodal Officer) திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) அவர்கள் இன்று (11.03.2022) காலை, எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர் வழங்கிய பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள 60 கணினி இயந்திரங்களை, சென்னை பெருநகர காவலில் உள்ள 60 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் சாரண ஆசிரியர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கினார். மேலும், இக்கணினி மூலம் காவல் சிறார் மன்றங்களில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு கணினி பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.