கடலூர் : கடலூர் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கர் மற்றும் காவல் துறையினர், கடந்த மாதம் 15-ந்தேதி பில்லாலி தொட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் ரோந்துப்பணியில், ஈடுபட்டனர். அப்போது அங்கு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு (58), என்பவர் 120 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து அவரை காவல் துறையினர், பிடித்து கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சாராய வியாபாரியான பாபு மீது பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, நெல்லிக்குப்பம் காவல் நிலையங்களில், 22 சாராய வழக்குகள் உள்ளன.
இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவரை தடுப்பு காவல் சட்டத்தில், கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு. சக்திகணேசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்ற மாவட்ட கலெக்டர் திரு. பாலசுப்பிரமணியம், சாராய வியாபாரி பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில், கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர், பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில், கைது செய்தனர், அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில், இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.