பெரம்பலூர்: இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ச. மணி அவர்களின் உத்தரவின் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்களின் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று 26.03.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட இரண்டு இரு சக்கர வாகன திருட்டு.
வழக்கில் சம்மந்தப்பட்ட பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமம், கீழவீதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் விக்ரம் (20), என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனம் உள்பட 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி திருட்டு வழக்கில் சம்மந்பட்ட நபரை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் மற்றும் அவரது குழுவினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.