சென்னை: ஆந்திராவிலிருந்து மெத்தம்பெடமைன் போதை பொருட்கள் வாங்கி பதுக்கி வைத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த வழக்கில் 8 நபர்களை கைது செய்து 2 கிலோ கஞ்சா மற்றும் 860 கிராம் எடை கொண்ட மெத்தம்பெடமைன் போதை பொருளை கைப்பற்றிய மாதவரம் துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Commissioner of Police appreciated and rewarded Deputy Commissioner of Police, Madhavaram and team for arresting 8 persons who sold Methamphetamine at Chennai and recovered 2 kgs Ganja and 860 gram Methamphetamine.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் துணை ஆணையாளர் திரு.E.சுந்தரவதனம், இ.கா.ப (துணை ஆணையாளர் பொறுப்பு வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம்) புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.வானமாமலை, வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் திரு.M.முகமது புஹாரி, திரு.விஜய், திரு.காதர் மீரா, திரு.செல்வகுமார், தலைமைக்காவலர்கள் திரு.கிருஷ்ணன் (த.கா.20265), திரு.முகமதுயாகியா, (த.கா.18321) திரு.மனுவேல் (த.கா.20315), திரு.சரவணன் (த.கா.25944), திரு.அசோக் (த.கா.27169) திரு.சரவணன் (த.கா.27354) திரு.ஷோபா (த.கா.27311), முதல் நிலைக்காவலர்கள் திரு.பாலமுரளி (மு.நி.கா.31349), திரு.சதாசிவம் (மு.நி.கா.31592) திரு.செந்தில்குமார் (மு.நி.கா29256) காவலர்கள் திரு.முகமது காட்டுபாவா (கா.51278), திரு.முத்துக்குமரன் (கா.41947) மற்றும் ஊர்காவல் படை வீரர் திரு.சரத்குமார் (HG-270) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை காவல் குழுவினர் கடந்த 6.03.2022 அன்று ,புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் மெத்தம் பெடமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த 1) ரோஹித் மணிகண்டன் (வ/26) என்பவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் மெத்தம்பெடமைன் என்ற போதைப் பொருள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
காவல் குழுவினர் ரோஹித் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு, மெத்தம்பெடமைன் போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த, 2) காதர் மொய்தீன், 3) நாகூர் ஹனிபா, 4) காஜா நவாஸ், 5) முகமது ஜாவித், 6) தமீம் ரோஸ்லான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 7) பட்டுலேலா வெங்கட் ரெட்டி (வ/28), 8.) ஷேக் முகமது (வ/53) ஆகியோரை கடந்த (10.03.2022) கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். மேற்படி கும்பலிடமிருந்து மொத்தம் 2 கிலோ கஞ்சா மற்றும் 860 கிராம் எடை கொண்ட மெத்தம் பெடமைன் என்ற போதை பவுடர் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் கும்பலை சேர்ந்த 8 நபர்களை கைது செய்த மாதவரம் துணை ஆணையாளர் திரு.E.சுந்தரவதனம், இ.கா.ப (துணை ஆணையாளர் பொறுப்பு வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம்), வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் திரு.M.முகமது புஹாரி, திரு.விஜய், திரு.காதர் மீரா, திரு.செல்வகுமார், தலைமைக்காவலர்கள் திரு.கிருஷ்ணன் (த.கா.20265), திரு.முகமதுயாகியா, (த.கா.18321) திரு.மனுவேல்(த.கா.20315), திரு.சரவணன் (த.கா.25944), திரு.அசோக் (த.கா.27169), திரு.ஷோபா, (த.கா.27311) முதல் நிலைக்காவலர்கள் திரு. பாலமுரளி (மு.நி.கா.31349), திரு.சதாசிவம் (மு.நி.கா.31592) ரு.செந்தில்குமார் (மு.நி.கா29256) காவலர்கள் திரு.முகமது காட்டுபாவா (கா.51278), திரு.முத்துக்குமரன் (கா.41947) மற்றும் ஊர்காவல் படை வீரர் திரு.சரத் (HG-270) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (12.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.