சென்னை: கொடுங்கையூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மோனிகா என்பவர், கொடுங்கையூர் காவல் குழுவினரால் கைது. செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். Kodungaiyur Police arrested Monika for stealing a mobile phone and a two-wheeler after asking for a lift on a two-wheeler. The mobile phone and two wheeler were recovered. சென்னை, கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் ஆசிக் (வ/20) என்பவர் கடந்த 16.03.2022 மாலை சுமார் 05.00 மணியளவில் கொடுங்கையூரில் அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஒரு பெண் தனது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என கூறி லிப்ட் கேட்டபோது, ஆசிக் தனது இருசக்கர வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு, அந்த பெண் கூறிய கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் 1வது குறுக்கு தெருவில் நிறுத்தச் சொல்லி, அந்த பெண்மணி ஆசிக்கிடம் தனது கணவரிடம் பேச வேண்டும் என செல்போனை கேட்டுள்ளார்.
உடனே ஆசிக் தனது செல்போனை கொடுத்தபோது, அந்த பெண் தனது ஆண் நண்பரிடம் பேசி வரவழைத்து, ஆசிக்கின் கவனத்தை திசை திருப்பி, இருவரும் ஆசிக்கின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ஆசிக் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மேற்படி புகார்தாரரிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மோனிகா (வ/20) கொடுங்கையூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் கைது செய்யப்பட்ட மோனிகா மீது மெரினா மற்றும் அண்ணாசதுக்கம் காவல் நிலையங்களில் தலா 1 வழிப்பறி வழக்கு உள்ளது தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.