சென்னை: தலைமைச் செயலக குடியிருப்பு காவல் எல்லையில் கஞ்சா மற்றும் Hashish (கஞ்சா எண்ணெய்) வைத்திருந்த 2 நபர்கள் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் குழுவினரால் கைது. 1.25 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ Hashish பறிமுதல். Secretariat Colony Police arrested 2 persons for possession of Ganja and Hashish. 1.25 Kgs Ganja and 10 Kgs Hashish seized. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (17.03.2022) மாலை அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பு அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா மற்றும் Hashish எனப்படும் கஞ்சா எண்ணெய் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1.விஜயகுமார், வ/37, த/பெ.மாணிக்கம், ஆட்டந்தாங்கல், காந்திநகர், செங்குன்றம், சென்னை, 2.அழகுராஜா, வ/34, த/பெ.கிருஷ்ணன், ராஜயோகி தெரு, காந்திநகர் , செங்குன்றம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ Hashish பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜெல் போன்ற நிலையில் இருக்கும் கஞ்சா எண்ணெய் எனப்படும் Hashish கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுவதும், எதிரிகள் இருவரும் மேற்படி Hashishஐ நேபாளத்திலிருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.