சென்னை: பகுதியில் பழனி என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை கத்தியால் கொலை செய்த விக்னேஷ் (எ) விக்கி மற்றும் ஆதிகேசவன் ஆகியோர், ராஜமங்களம் காவல் குழுவினரால் கைது. Rajamangalam Police arrested Vignesh @ Vikii and Aadhikesavan for murdering history sheeted accused Pazhani with knife. சென்னை, கொளத்தூர் பகுதியில் வசித்து வந்த பழனி (வ/28) என்பவர் ராஜமங்களம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ராஜமங்களம் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 12 குற்ற வழக்குகள் உள்ளது. பழனி 14.03.2022 அன்று மாலை சுமார் 06.30 மணியளவில், கொளத்தூர், மக்காரம் தோட்டம், எத்திராஜ் தெருவில் உள்ள நண்பரை பார்க்க சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பழனியை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜமங்களம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் பழனியின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ராஜமங்களம் காவல் நிலையத்தில் கொலை பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராஜமங்களம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை குற்றத்தில் ஈடுபட்ட 1) விக்னேஷ் (எ) விக்கி (எ) மாசி (எ) அமாவாசை (வ/28) கொளத்தூர் 2) ஆதிகேசவன் (வ/19) கொளத்தூர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொலை குற்றத்திற்கு பயன்படுத்திய 2 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
இறந்துபோன பழனி என்பவர் 2018ம் ஆண்டு எதிரி விக்னேஷ் என்பவரை கத்தியால்தாக்கியதும்,2020ம் ஆண்டுமற்றொரு எதிரி ஆதிகேசவன் என்பவரை கத்தியால் தாக்கியதும், இதன் முன்விரோதம் காரணமாக எதிரிகள் இருவரும் சேர்ந்து 14.03.2022 அன்று பழனியை கொலை செய்ததும், விசாரணையில் தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.