சென்னை: அயனாவரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 3 நபர்கள், அயனாவரம் காவல் குழுவினரால் கைது. 2 கத்திகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.Ayanavaram Police arrested 3 persons who assaulted a person with a knife due to previous enmity. 2 knives and one two wheeler were recovered. சென்னை, அயனாவரம் பகுதியில் வசிக்கும் சதீஷ் (வ/20) என்பவர் கடந்த 08.03.2022 அன்று இரவு அயனாவரம், சோலை மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் முன்விரோதம் காரணமாக மேற்படி சதிஷை வழிமறித்து, தகராறு செய்து, சதீஷை கத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் பலத்த இரத்த காயமடைந்த சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேற்படி சம்பவம் குறித்து சதீஷின் தாயார் கார்த்திகா என்பவர், அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை செய்து, தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி கத்தியால் தாக்கி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 1) கிருபா(எ) கிருபானந்தன் (வ/20) கொடுங்கையூர் 2) சிவா(எ)வாண்டு சிவா (வ/19) அம்பத்தூர் எஸ்டேட் 3) சூர்யா(எ)காட்டப்பா (வ/19) அண்ணாநகர் என்பவர்களை கைது செய்தனர். விசாரணையில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கிருபா (எ) கிருபானந்தன் என்பவரை கடந்த 2019 ம் ஆண்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கத்தியால் தாக்கியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மேற்படி சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட கிருபா (எ) கிருபானந்தன் அயனாவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 2 கொலை வழக்கு உட்பட 23 வழக்குகளும், சிவா (எ) வாண்டு சிவா மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. மேற்படி குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.