சென்னை: திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் நன்னடத்தை பிணையில் இருந்து வந்த மாலா மற்றும் சரவணன் ஆகியோர், அந்த பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் திருவல்லிக்கேணி காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
Triplicane Police remanded Mala and Saravanan to judicial custody on the orders of Deputy Commissioner of Police, Triplicane, for having violated the bond conditions of the security proceedings initiated against them. சென்னை, பல்லவன் சாலை, காந்திநகர், பகுதியில் வசிக்கும் சரவணன் (வ/42) மற்றும் இவரது மனைவி மாலா (பெ/39) ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர். இவர்கள் இருவர் மீதும் கஞ்சா, அடிதடி, மதுபாட்டில்கள் விற்பனை செய்தது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.
இந்நிலையில், மாலா கடந்த 18.09.2021 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். இதே போல, சரவணன் கடந்த 25.10.2021 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அவர்களிடம் 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுத்தார். ஆனால், சரவணன் மற்றும் அவரது மனைவி மாலா ஆகியோர் கடந்த 16.03.2022 அன்று, வீட்டினருகே பல்லவன் சாலை, காந்திநகர் 7வது தெரு சந்திப்பில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இருவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன்பேரில், எதிரிகள் மாலா மற்றும் சரவணன் ஆகியோர் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர், திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள், மேற்படி எதிரி மாலா என்பவருக்கு, கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 185 நாட்களும், சரவணன் என்பவருக்கு கு.வி.மு.ச. பிரிவு 107ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 217 நாட்களும், பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து கடந்த 24.03.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரிகள் மாலா மற்றும் சரவணன் ஆகியோர் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.