சென்னை: தொழில் போட்டியில், பாரிமுனை பகுதியில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து, இரும்பு கம்பியால் தாக்கி, துன்புறுத்திய வழக்கில் முகமது இம்தியாஸ் என்பவர், வடக்கு கடற்கரை காவல் குழுவினரால் கைது.
North Beach Police arrested Mohammad Imtiaz for wrongfully confining a person in a hotel at Paris Corner and beat with an iron bar.
தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (எ) செல்லப்பா (வ/28) என்பவர் துபாயில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த செல்வம் (எ) செல்லப்பாவை ஒரு கும்பல் சென்னை, மண்ணடியில் உள்ள தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து இரும்பு கம்பி மற்றும் பைப்பால் அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், செல்வம் (எ) செல்லப்பா கொடுத்த புகாரின் பேரில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், செல்வம் துபாயில் இருந்து இந்தியா வருவதற்கு முன்பு அவருக்கு தெரிந்து நபரான அருண்பிரசாத் என்பவர் தான் கொடுக்கும் தங்கக்கட்டியை இந்தியா சென்றதும், அங்கு ஹக்கீம் என்பவரிடம் கொடுக்கும்படியும், அப்படி கொடுத்தால் பணம் தருவதாகவும் கூறினார். அதன்பேரில், செல்வம் தங்கக்கட்டியை வாங்கிக் கொண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வரும்போது, செல்வத்தின் நண்பர் அனீஸ்குமார் என்பவரிடம் அந்த தங்கக்கட்டியை கொடுத்து இந்தியா வந்ததும் வாங்கிக் கொள்வதாக கூறியதும், ஆனால் அனீஸ்குமார் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தங்கக்கட்டியுடன் தப்பிச் சென்றதும், இதனால், இந்தியா வந்த செல்வத்திடம் தங்கக்கட்டி இல்லாததால், ஹக்கீம் மற்றும்.
அவரது கூட்டாளிகள் செல்வம் (எ) செல்லப்பாவை கடத்திச் சென்று, ஒவ்வொரு ஊராக சென்று தங்கக்கட்டியுடன் தலைமறைவான நபர் குறித்து விசாரித்து, கடந்த மார்ச் முதல் வாரத்தில் சென்னை, மண்ணடியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையில் செல்வத்தை அடைத்து வைத்து, தினசரி இரும்பு கம்பி மற்றும் பைப்பால் அடித்து துன்புறுத்தியதும், இதனால் உடல்நிலை மோசமான நிலையில் செல்வம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் செல்வம் (எ) செல்லப்பாவை கடத்திச் சென்று அறையில் வைத்து தாக்கிய கும்பலைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் (வ/28) மண்ணடி என்பவரை கைது செய்தனர். விசாரணையில் முகமது இம்தியாஸ் மேற்படி எதிரிகளுக்கு மண்ணடியில் உள்ள விடுதியில் அறை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.