சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியில் சதிஷ் என்பவரிடம், தகராறு செய்து, கைத்தடியால் தாக்கிய சரத்குமார் (எ) மணி என்பவர், வண்ணாரப்பேட்டை காவல் குழுவினரால் கைது.Washermenpet Police arrested Sarathkumar @ Mani who assaulted Sathish during wordy quarrel at Washermenpet.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் மாற்று திறனாளி சதிஷ் (வ/28) என்பவர் 05.03.2022 அன்று மதியம் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடும்பாதை, கல்லறைச் சாலை சந்திப்பில் தனது இருசக்கர வாகனத்தில் இருந்தபோது, அங்கு வந்த சதீஷின் வீட்டின் அருகில் வசிக்கும் தெரிந்த நபரான சரத்குமார் (எ) மணி (எ) கோளாறுமணி என்பவர் மேற்படி சதிஷ் பயன்படுத்தும் கட்டையினால் ஆன கைத்தடி மீது அமர்ந்தபோது, சதிஷ் கைத்தடி மீது அமர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதில், சரத்குமார் (எ) மணி (எ) கோளாறுமணி கட்டையால் ஆன கைத்தடியை வைத்து, சதீஷை தாக்கியுள்ளார்.பின்னர் இச்சம்பவம் குறித்து சதீஷ், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சரத்குமார் (எ) மணி (எ) கோளாறு மணி (வ/27) பழைய வண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர். மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.