தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர மேற்கு காவல் நிலைய சரகம் வடக்கு வாசல் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் திரு.ஜெயபால் என்பவரை ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். இதனை அறிந்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன், IPS., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு கல்வி உதவி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.