சென்னை: வேப்பேரி பகுதியில் முன் விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் வேப்பேரி காவல் குழுவினரால் கைது. Vepery Police arrested 2 persons who assaulted a grocery shop owner with a knife due to previous enmity. சென்னை, புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் (வ/28) என்பவர் மேற்படி தனது வீட்டின் முன்பாக மளிகை வைத்து நடத்தி வருகிறார். பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு தனது மளிகை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக மேற்படி கடையின் அருகில் சில இளைஞர்கள் மது மற்றும் சிகரெட் அடித்து வந்துள்ளதை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் 11.03.2022 அன்று காலை சுமார் 10.00 மணியளவில் மேற்படி மளிகை கடைக்கு வந்த 3 இளைஞர்கள் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, மேற்படி முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் மேற்படி 3 இளைஞர்களும் சேர்ந்து, பாலகிருஷ்ணனை கத்தியால் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இதில் இரத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேற்படி சம்பவம் குறித்து, வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1) கிருஷ்ணகுமார் (எ) சுபாஷ் (வ/20) ஓட்டேரி 2) நிர்மல்குமார் (வ/20) புரசைவாக்கம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.