சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா விற்பனை தொடர்பான சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு, கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்து 28 குற்றவாளிகளை கைது செய்தனர். மேற்படி எதிரிகளிடமிருந்து 86.3 கிலோ கஞ்சா, 2 கிலோ எபிடிரைன் போதை பொருள், 860 கிராம் மெத்தம்பெடமைன் போதை பவுடர், 1,101 நைட்ரோவிட் மாத்திரைகள், 1 இலகுரக வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. On the orders of Greater Chennai Police Commissioner, the police team conducted surveillance and registered 15 cases for possessing and selling Ganja and drugs illegally in last 7 days and 28 accused were arrested. 86.3 kg Ganja, 2 kg Ephedrine, 860 gram Methamphetamine, 1,101 pills, 1 vehicle and 1 two wheeler were recovered from them.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 04.03.2022 முதல் 10.03.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பெண்கள் உட்பட 28 ற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 86.3 கிலோ கஞ்சா, 2 கிலோ எபிடிரைன் போதை பொருள், 860 கிராம் மெத்தம்படமைன் போதை பவுடர், 1,101 நைட்ரோவிட் மாத்திரைகள், 1 இலகுரக வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
இதில் குறிப்பிடும்படியாக வடக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இணைந்து, 06.03.2022 அன்று, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் மெத்தம்படமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த 1) ரோஹித் மணிகண்டன் (வ/26) என்பவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் மெத்தம்படமைன் என்ற போதைப்பொருள்ஆகியவைகைப்பற்றப்பட்டது. காவல் குழுவினர் பிடிபட்ட குற்றவாளி ரோஹித் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு, மெத்தம்படமைன் போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த, 2) காதர் மொய்தீன், 3) நாகூர் ஹனிபா, 4) காஜா நவாஸ், 5) முகமது ஜாவித், 6) தமீம் ரோஸ்லான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 7) பட்டுலேலா வெங்கட் ரெட்டி (வ/28), ஷேக் முகமது (வ/53) ஆகியோரை 10.03.2022 அன்று கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். மேற்படி கும்பலிடமிருந்து மொத்தம் 2 கிலோ கஞ்சா மற்றும் 860 கிராம் எடை கொண்ட மெத்தம்படமைன் என்ற போதை பவுடர் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கடந்த 07.03.2022 அன்று கிடைத்த தகவலின் பேரில், K.N.S டிப்போ அருகில் கண்காணித்து, Ephedrine என்ற போதை பொருள் மறைத்து வைத்திருந்த நரேந்திரகுமார் (வ/32) கொருக்குப்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ Ephedrine போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான கீழ்பாக்கம் துணை ஆணையாளர் தனிப்படை காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 07.03.2022 அன்று மதியம் நியூ ஆவடி ரோடு ஆஸ்பிரியன் கார்டன் சந்திப்பு அருகில் கண்காணித்து, ஈச்சர் வேனில் கஞ்சா கடத்தி வந்த 1) பிரதீப்ராஜ் (வ/29) பூந்தமல்லி 2) வரதராஜு (வ/36) விழுப்புரம் மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 62 ½ கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஈச்சர் வேன் கைப்பற்றப்பட்டது. மேற்படி காவல் குழுவினர் கடந்த 06.03.2022 அன்று சேத்துப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருசாமி பாலம், மெக்நிக்கல் ரோடு 3வது சந்து அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) ஷேக் மொய்தீன் பாட்ஷா (வ/29) ஆந்திரபிரதேச மாநிலம், 2) துர்கா பிரசாத் (வ/30) ஆந்திர பிரதேசம் 3) லோகநாதன் துர்கா (வ/26) ஆந்திர பிரதேசம் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 06.03.2022 ஆர்.கே.நகர், ஐஓசி பேருந்து நிறுத்தம் பின்புறம் அதிகளவு உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்னைக்காக வைத்திருந்த ஜாபர் சாதிக் (வ/26) தண்டையார்பேட்டை என்பரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தம் 1,101 நைட்ரோவிட் உடல் வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.