திண்டுக்கல்: 10.04.2022 திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 14 வயது சிறுமியை குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த அஜித் (19) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (14.03.2022) அன்று அஜித் குமார் உட்பட கடத்திச் சென்று திருமணம் செய்வதற்கு உதவியாக இருந்த அஜித் குமாரின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உட்பட நான்கு நபர்களை குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சத்திரப்பட்டி காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 4 நபர்களில் அஜித்குமாரின் குற்ற நடவடிக்கை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண் காணி ப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அஜித் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார் அஜீத் குமாரை திண்டுக்கல் சிறையில் இருந்து எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா