தூத்துக்குடி: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்க மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில்,போதைப் பொருளுக்குஎதிரான சிறப்புநடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கிசிறப்பித்தார் . சென்னையில் இன்று (10.03.2022) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21.12.2021 அன்று 21 கிலோ ஹெராயின் உட்பட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கட்டுபடுத்தி போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்.