திண்டுக்கல்: போலீசாரை கத்தியால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அதிரடி நடவடிக்கை.
06.03.2022 திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராபுரம் செல்லும் சாலையில் கடந்த மாதம் பழனி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சந்தான கிருஷ்ணன் அவர்களை கத்தியைக் கொண்டு தாக்கிய வழக்கில் பழனி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்குமார்(22) மற்றும் யுவராஜ்(23) ஆகிய இருவரையும் பழனி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பொன்குமாரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் பொன்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
உத்தரவைத் தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய போலீசார் பொன்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா