திண்டுக்கல்: கொலை வழக்கில் தொடர்புடைய 03 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை 26.03.2022 திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாயக்கன்பட்டியில் கடந்த 08.02.2022 ம்தேதி ஜான் பீட்டர்(40) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 06 நபர்களை அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 06 நபர்களில் முதற்கட்டமாக சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜான்சன்(26), சிஜு(25) மற்றும் ஆரோக்கியதாஸ் (33) ஆகிய மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் வில்லியம் (22), நோவா (23), மற்றும் தோமையார் புரத்தைச் சேர்ந்த மாதவன் (24) ஆகிய மூன்று நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மூன்று நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் பாஸ்கர் வில்லியம், நோவா, மாதவன் ஆகிய மூன்று நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா