திண்டுக்கல்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அதிரடி நடவடிக்கை. 02.04.2022 திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உசிலம்பட்டி பிரிவு அருகே கடந்த 31.01.2022 ம் தேதி மலையப்பன்பட்டியைச் சேர்ந்த சாமிதுரை (31) என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் மலையப்பன்பட்டியைச் சேர்ந்த மருதுபால் சாகிப் (29) என்பவர் உட்பட 3 நபர்களை வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மலையப்பன்பட்டியைச் சேர்ந்த மருதுபால் சாகிப் (29) என்ற குற்றவாளியின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் மருதுபால் சாகிப்யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா