திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அரங்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், குழந்தைகள் போதை பொருட்களுக்கு அடிமையாவததை தடுப்பது குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவ மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்