தென்காசி : தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூரை சேர்ந்த பார்வதி என்பவருக்கு கிருஷ்ணபாண்டி மற்றும் அவரது தகப்பனார் 89 சென்ட் நிலத்தை 2004 ஆம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்துள்ளனர். மேற்படி அதே நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் கிருஷ்ண பாண்டி அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளிடமிருந்து ஏற்பாடு ஆவணம் பெற்றுள்ளனர். ஏற்கனவே கிரையம் செய்து கொடுத்த நிலத்தை கிருஷ்ண பாண்டி அவரது பெயருக்கு ஏற்பாடு ஆவணம் தயார் செய்து மோசடி செய்ததாகவும்.
தனது நிலத்தை மீட்டு தருமாறு பார்வதி தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (30.07.2021) அன்று கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB) திரு.நல்லசிவம் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) திருமதி.J.சந்தி செல்வி அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி தயார் செய்த போலி ஆவணத்தை ரத்து செய்து 89 சென்ட் நிலத்தை மீட்டு பார்வதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மோசடியாக விற்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு மீட்டு ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.