வேலூர் : திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு வட்ட காவல் ஆய்வாளர் திரு.S.பாலு, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் செய்யாறு காவல் நிலைய குற்ற எண் 147/2022 வழக்கில், சம்பந்தப்பட்ட இரு குற்றவாளிகளை. கைது செய்து அவர்களிடமிருந்து 23, இருசக்கர வாகனங்களை மீட்டு விசாரணை நடத்தி குற்றவாளிகள் இருவரையும் சிறையில் அடைத்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, மெச்சத் தகுந்த பணியை பாராட்டி (29.05.2022), -ந் தேதி வேலூர் சரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.Z. ஆனி விஜயா,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தனர்.