சென்னை: வேளச்சேரி காவல் நிலைய எல்லையில், தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் ரூ.20,000/-ஐ வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன பெண் மேலாளர் புவனேஸ்வரியை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.The Commissioner of Police appreciated and honoured the private company manager Bhuvaneshwari, who honestly handed over the cash of Rs.20,000/- lying unattended at ATM.
சென்னை, சேலையூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (பெ/44) என்பவர் கோடாக் லைப் இன்சூரன்ஸ், வேளச்சேரி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
புவனேஸ்வரி கடந்த 07.03.2022 அன்று சுமார் 12.00 மணியளவில் கிண்டி, சர்தார் படேல் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ATM மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு ஏற்கனவே யரோ ATMல் வந்த பணம் ரூ.20,000/-ஐ எடுக்காமல் விட்டு சென்றது தெரியவரவே, புவனேஸ்வரி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து, வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க மேற்படி பணம் ரூ.20,000/-ஐ ஒப்படைத்தார்.
விசாரணையில், திரு.ஆனந்தன் (வ/87) என்ற முதியவர் மேற்படி வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்க முற்பட்டு பணம் வராததால் சென்றதும், சிறிது நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வந்ததும், அச்சமயம் மேற்படி புவனேஸ்வரி ஏடிஎம் மையத்திற்கு சென்றபோது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருந்ததை கண்டதும் தெரியவந்தது.தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் ரூ.20,000/-ஐ வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன பெண் மேலாளர் புவனேஸ்வரியை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (09.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.