சென்னை: சென்னை பெருநகர காவல், குமரன்நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.எம்.சீனிவாசன், தலைமைக் காவலர் பி.கோபிநாத் (த.கா.18267) மற்றும் முதல்நிலைக் காவலர் கே.சதிஷ் (மு.நி.கா.45090) ஆகியோர் 30.03.2022 அன்று இரவு பாரிநகர், கரிகாலன் தெருவில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, நள்ளிரவு 11.45 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 நபர்களை இருசக்கர வாகனத்தை நிறுத்த சொன்னபோது, இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர். காவல் குழுவினர் ஓடி சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது, ஒரு கத்தி வைத்திருந்தது தெரியவந்ததின்பேரில், கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள், பரூக் ஷேக் (வ/22) பெரும்பாக்கம் மற்றும் சாரதி (வ/19) பெரும்பாக்கம் என்பதும், இவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருவான்மியூர் பகுதியில் திருடியதும், இவர்கள் சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் அர்ஜுன் என்பவரை கொலை செய்வதற்காக மேற்படி திருட்டு இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் சென்று சென்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில், நடக்கவிருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
மேற்படி சம்பவம் குறித்து குமரன்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு, குமரன்நகர் பகுதியில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்களை பிடித்த குமரன் நகர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (23.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.