நீலகிரி: நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி. இங்கு உள்ள சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் கோடை விழாவில் பல வகையான விழாக்கள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. அதில் அதிக சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள். நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பில் புதிதாக ஹில் காப் (Hill Cop the Nilgiris Police) என்ற பெயரில் 4 என்பீல்ட் இரண்டு சக்கர வாகன ரோந்து காவலர்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 இருசக்கர வாகனம் ஆண் காவலர்களும், 1 இருசக்கர வாகனம் பெண் காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபட ஒதுக் கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு Body Worn Camera, Walkie Talkie and Blinking Reflective lights ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் உதகை நகர் பகுதியில் கோடை விழாவின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை, உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சீர் செய்வதுடன் சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக இருப்பார்கள். மேலும் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை போன்ற குற்றங்கள் நடவாமல் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்கள் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் ஹில் காப் கபே (Hill Cop Cafe) என்ற பெயரில் மலிவு விலையில் தரமான சுவையுடன் புதியதாக உணவகம் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரு. R. சுதாகர், இ.கா.ப., காவல் துறை தலைவர், மேற்கு மண்டலம் அவர்கள் கலந்து கொண்டு உணவகத்தை, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் முனைவர் M.S. ர்முத்துசாமி, இ.கா.ப., காவல் துறை துணைத் தலைவ, கோவை சரகம், கோவை மற்றும் திரு. ஆஷிஸ் ராவத், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம் ஆகியவர்கள் உடன் இருந்தனர்.