கோவை: கோவை,தெற்கு உக்கடம், சி.எம்.சி. காலனியில் ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு யாரோ மர்ம ஆசாமிகள் இந்த கோவில் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 7 தங்க காசுகளைதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் முருகேசன் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.