தேனி: மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற பணப்பையை ஆட்டோவில் தவறவிட்ட பெண்.!
ஆட்டோ டிரைவர் சந்துரு அவர்களின் நேர்மையான செயலால் காவல் துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணப்பை.! ஆட்டோ டிரைவருக்கு காவல்துறையினர் பாராட்டு. தேனி அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சந்துரு, தேனி நகர் பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார், இவருடைய ஆட்டோவில் பெண்ணொருவர் பொம்மைய கவுண்டன்பட்டியிலிருந்து தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்த நிலையில் அப்பெண் ஆட்டோவிலிருந்து இறங்கி பேருந்து நிலையத்திற்கு சென்றுவிட்டார், அந்த பெண்ணை இறக்கி விட்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவின் பின்புறத்தில் பை ஒன்று இருப்பதை கண்டு மீண்டும் பேருந்து நிலையம் வந்து ஆட்டோ ஓட்டுனர் அக்கம்பக்கம் தேடிப் பார்த்ததில் அப்பெண்ணை காணவில்லை, உடனடியாக அந்தப் பையை எடுத்துக்கொண்டு தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த பையை திறந்து பார்த்த காவல்துறையினர் அதில் ரூபாய் 17,500 மற்றும் வங்கி புத்தகம் இருந்ததை அடுத்து ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்தனர், தகவலறிந்து வந்த அப்பெண் காவல்துறையினரிடம் தனது தாயார் கம்பத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போது பையை தவறிவிட்டதாக கூறிய நிலையில் வங்கி புத்தகத்தில் உள்ள புகைப்படம் அவருடன் ஒத்து இருந்ததை அடுத்து பணப்பையை உரியவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். பையை பெற்றுக் கொண்ட பெண், ஆட்டோ ஓட்டுனர் சந்துரு அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். நேர்மையான முறையில் பணப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் சந்துரு அவர்களுக்கு காவல்துறையினர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.