சென்னை: கடந்த 22.03.2022 அன்று போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இருக்கை கட்ச்சை (Seat Belt) போடாமல் பயணம் செய்ததற்காக 2,397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் (Obstruction) என்ற பிரிவின் கீழ் 1,253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இழுவை வாகனம் மூலம் 173 இரு சக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 790 நான்கு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் பூட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டது.
மேலும் பிற பிரிவுகளின் கீழ் சுமார் 6,602 வழக்குகள் என மொத்தம் 11,215 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் சென்னையில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், வாகன நெரிசல் இல்லாமல் போக்குவரத்து சீராக செல்வதற்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், இருக்கை கட்ச்சை (Seat Belt), அணியாத வாகனங்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் (Obstruction), இரண்டு மற்றும் நான்கு சக்கர இழுவை வாகனத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள் போன்ற வழக்குகளின் கீழ் 22.03.2022 அன்று இரவு 10 மணி வரை சென்னை பெருநகர் முழுவதும் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
மேலும் கடந்த 22.03.2022 அன்று இரவு 10.00 மணிவரை சென்னை பெருநகர் காவல் எல்லைக்குட்பட்ட 112 முக்கிய சந்திப்புகளில் எந்தவொரு வாகனமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வண்ணம் ஜீரோ வைலேசன் (Zero Violation) பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருக்கை கட்ச்சை (Seat Belt) போடாமல் பயணம் செய்ததற்காக 2,397 வழக்குகளும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் (Obstruction) என்ற பிரிவின் கீழ் 1,253 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. மேலும் இழுவை வாகனம் மூலம் 173 இரு சக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 790 நான்கு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் பூட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டது. மேலும் பிற பிரிவுகளின் கீழ் சுமார் 6,602 வழக்குகள் என மொத்தம் 11,215 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.