திருவள்ளூர் : சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதீர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களை கைவிடுங்கள்
என அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொன்னேரி காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பில் பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ்பள்ளி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் பள்ளிக்கு வரவேண்டும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது கஞ்சா உள்ளிட்ட மது பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது என்றும்.
செல்போன்களை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாதுஎன்றும் காதல் போன்ற விவகாரங்களில் தலை யிட்டு சிறு வயதிலேயே சீரழியக் கூடாது என்றும் சட்டங்கள் கடுமையாக உள்ளதாகவும் தண்டனைகள் கிடைக்கும் எனவும். தவறுகளை ஒப்புக் கொண்டாலே தவறு செய்யும் எண்ணம் தோன்றாது என்றும் மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யும் முன் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் அப்போதுதான் நோய்நொடியின்றி மாணவர்கள் வாழமுடியும் என்றும் பேருந்து படிக்கட்டுகளிலும் மேற்கூரைகளில் பயணம் செய்யாதீர்கள் தானும் ஒரு ஆசிரியர்தான் ஆசிரியர்களின் பேச்சினை கேட்டு மாணவர்கள் நடக்க வேண்டுமென
அறிவுரை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்