இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.03.2022) இராமநாதபுரம் சரக அளவிலான காவல் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப., காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு.அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர், தென் மண்டலம். திரு.N.M.மயில்வாகனண், இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர், இராமநாதபுரம் சரகம். திரு.E.கார்த்திக், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் மாவட்டம், முனைவ ர் திரு.T.செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம் மற்றும் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் இராமநாதபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், பெண்கள் மற்றும் சமூகவிரோதிகளின் செயல்பாடுகள் அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் ஆய்வு செய்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதிலும் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆகியோரை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் வெகுவாக பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.