அரியலூர்: உயிருக்கு போராடியவரை 2.கி.மீ தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றிய காவல்துறையினர்
அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் ரயில்வே கேட்டின் அருகே, ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறிக் கீழே விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அறிந்த அரியலூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் திரு.சுகுமார் , காவலர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் ஆம்புலன்ஸ் செல்ல இயலாத நடுக்காட்டில் இருந்து 2 கிலோமீட்டர் வரை இளைஞரை தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். காவலர்களின் இத்தகைய செயலை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.