திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.திரு . கார்த்திகேயன்இ.கா.ப, அவர்களின் உத்தரவுபடி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர், மற்றும் மதிய நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் இணைந்து மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. S. இளங்கோ, செங்கம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர், போளுூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. புனிதா, செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கலையரசி, ஆகியோர் தலைமையில் தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரனை வனப்பகுதியில், நடத்திய சோதனையில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை பகுதியான கல்வராயன் மலைப்பகுதி ஆத்தி பாடி வனப்பகுதியில், நடத்திய சோதனையில் தலா 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 பிளாஸ்டிக் பேரல்களில் 3000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரலும் கல்வராயன் மலைப்பகுதி கல்நாட்டுர் புதூர் வனப்பகுதியில், நடத்திய தேடுதல் வேட்டையில், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட நாலு சின்டெக்ஸ் டேங்கில், 2000 லிட்டர் கள்ளச்சாராயூரணம் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 20 லிட்டர், நாட்டு சாராயம் கீழ் வலசை, மேல் வலசை மலைப்பகுதியில், தலா 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 பேரல்களில், 1000 லிட்டர், கள்ளச்சாராய ஊரலும் என மொத்தமாக ஒன்பதாயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 20 லிட்டர் நாட்டுச்சாராயம், கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னியூர் எடல் ஏரியின் மேற்கில் உள்ள ஓடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மாவட்ட தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட எட்டு பிளாஸ்டிக் பேரல்களில், மொத்தம் 2000 லிட்டர் கள்ளச்சாராய உரல் கண்டுபிடிக்கப்பட்டு ஊழல் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் வள்ளி வாகை கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், 35 லிட்டர் எரி சாராயமும் மலப் பாம்பாடி கிராமத்தில், நடத்திய தேடுதல் வேட்டையில் 20, லிட்டர் எரி சாராயமும் நல்லவன் பாளையம் கிராமத்தில், நடத்திய தேர்தல் வேட்டையில், 50 நாட்டுச் சாராயமும் பறிமுதல் செய்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு தாலுக்கா தட்டரனை கிராமம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், முரளி, முருகன், உள்ளிட்ட குற்றவாளிகளை காவல்துறையினர், தீவிரமாக தேடி வருகின்றனர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்